ெரயில் நிலையங்களில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை
ெரயில் நிலையங்களில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறைக்கு கலெக்டர் கண்ணன் அறிவுறுத்தினார்.
விருதுநகர்,
ெரயில் நிலையங்களில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறைக்கு கலெக்டர் கண்ணன் அறிவுறுத்தினார்.
ஆலோசனை கூட்டம்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து துறை அலுவலர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் கண்ணன் கூறியதாவது:-
மாவட்டத்திலுள்ள விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையம் ெரயில் நிலையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபடவேண்டும்.
தொடர்பரிசோதனை
ெரயில் பயணிகளை பரிசோதனை மேற்கொண்டு தொற்றுள்ள நபர்களை அருகில் உள்ள ெரயில் நிலையங்களில் உள்ள காத்திருப்போர் அறையில் தங்க வைத்து அவர்களுக்கு தொடர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
பரிசோதனைகள் மேற்கொள்வதற்கு வசதியாக ஒரேவழியில் ெரயில் நிலையத்திலிருந்து வெளியே வருவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
மேலும் கபசுரகுடிநீர், நிலவேம்பு கசாயம் ஆகியவற்றை பொது இடங்களில் வைத்து மக்களுக்கு வழங்க மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பரிசோதனை முகாம்
வணிகரீதியான அமைப்புகளில் கடுமையான விதிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தப்பட வேண்டும். காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்த வேண்டும்.
கொரோனா தாக்கப்பட்டு இறப்பு ஏற்பட்டு இருந்தால் அப்பகுதிகளில் சுத்தப்படுத்தும் பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் ஆக்சிஜன் வினிேயாகம் மற்றும் இருப்பு குறித்து தெரிவிப்பதுடன் அதில் பற்றாக்குறை இல்லாமல் போதுமான அளவில் இருப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கடந்த காலங்களில் அனைத்து அரசு ஊழியர்களின் பங்களிப்பு மிக சிறப்பாக இருந்தது.
நடவடிக்கை
அதேபோல் வரும் காலங்களில் கொரோனாதடுப்பு நடவடிக்கைகளில் அனைவரும் ஒன்றிணைந்து சிறப்பாக பணிமேற்கொண்டு ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கண்ணன் தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாள், மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், திட்ட இயக்குனர் ஜெயக்குமார், சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார் மற்றும் அனைத் துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.