தெரு நாய்கள் கடித்து குதறியதில் புள்ளிமான் செத்தது
உப்பிலியபுரம் அருகே தெரு நாய்கள் கடித்து குதறியதில் புள்ளிமான் பரிதாபமாக செத்தது.
உப்பிலியபுரம்,
பச்சைமலை பகுதியிலிருந்து மான்கள் தண்ணீருக்காக வனப்பகுதியிலிருந்து சமதளப்பகுதிக்கு வருவது வழக்கம். அதுபோல் 2 வயது ஆண் புள்ளிமான் ஒன்று நேற்று காலை தண்ணீருக்காக உப்பிலியபுரம் அருகே உள்ள சோபனபுரம் பகுதிக்கு வந்தது. ரெட்டிக்குட்டை அருகே மான் வந்த போது, அதை தெருநாய்கள் விரட்டி கடித்து குதறின. இதில் படுகாயம் அடைந்த புள்ளிமான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தது. இதுபற்றி தகவலறிந்த வனச்சரகர் பொன்னுசாமி தலைமையில் வனவர் திவ்யா, வனக்காப்பாளர் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புள்ளி மானின் உடலை மீட்டனர். இதைத்தொடர்ந்து கால்நடை மருத்துவர் சதீஸ் மூலம் மானின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.