வாலிபரின் விரலை கடித்து துண்டித்தவர் மீது வழக்கு
வாலிபரின் விரலை கடித்து துண்டித்தவர் மீது வழக்கு செய்யப்பட்டது.
அறந்தாங்கி, ஏப்.28-
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மருதங்குடியை சேர்ந்தவர் பசுபதி. இவர் நேற்று மருதங்குடி பஸ் நிறுத்தம் அருகே நின்றுகொண்டு குடிபோதையில் தகாத வார்த்தையால் பேசிக்கொண்டிருந்தார். இதை அதே பகுதியை சேர்ந்த மேகநாதன் (வயது 26) என்பவர் தட்டி கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த பசுபதி, மேகநாதனின் கட்டை விரலை கடித்து துண்டித்து கீழே துப்பினார். இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் மேகநாதனின் பாதி கட்டைவிரலை மீட்டு வாட்டர் கேனில் போட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலீசார் பசுபதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.