அரூர் அருகே முன்விரோதம் நாட்டு துப்பாக்கியால் அண்ணியை சுட்ட தொழிலாளி

நாட்டு துப்பாக்கியால் அண்ணியை சுட்ட தொழிலாளி

Update: 2021-04-27 18:00 GMT
அரூர்:
அரூர் அருகே முன்விரோதம் காரணமாக அண்ணியை நாட்டு துப்பாக்கியால் சுட்டவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
முன் விரோதம்
அரூரை அடுத்துள்ள சித்தேரி ஊராட்சி அரசநத்தத்தைச் சேர்ந்தவர் வடிவேலு (வயது 55). தொழிலாளி. இவருடைய அண்ணன் மனைவி சரோஜா. இருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் அந்த கிராமத்தில் இவர்களுக்கு நிலம் உள்ளது. அதில், இருவருக்கும் பொதுவான விவசாய கிணறு உள்ளது. சரோஜா அந்த கிணற்றில் இருந்து டீசல் என்ஜின் மூலம் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு இருந்தார்.
துப்பாக்கி சூடு
அப்போது அங்கு வந்த வடிவேலு சரோஜாவை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டார். அதில் சரோஜாவின் கால் தொடையில் குண்டு பட்டு பலத்த காயம் ஏற்பட்டது.
அப்போது அவரின் சத்தம் கேட்டு மகன், மருமகன் வந்தனர். இதைக்கண்டதும் வடிவேலு அங்கிருந்து ஓடிவிட்டார். இதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட வடிவேலுவை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்