தொண்டி,
திருவாடானை யூனியனில் உள்ள 47 ஊராட்சிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஊராட்சி தலைவர்கள் மூலம் தீவிரமாக செயல்படுத்தபட்டு வருகிறது. வட்டார வளர்ச்சி அலுவலர் உம்முல் ஜாமியா ஒவ்வொரு ஊராட்சிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒலிபெருக்கி மூலம் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் திருவாடானை யூனியனில் கல்லூர், அரசத்தூர் போன்ற சில ஊராட்சிகளில் கொரோனா 2-வது அலை காரணமாக சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் வீட்டைவிட்டு வெளியே சென்று விட்டு வீடு சென்றவுடன் சோப்பு போட்டு கை, கால் முகத்தை சுத்தம் செய்ய வேண்டும். அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அவசியம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவருடன் ஊராட்சி தலைவர்கள், செயலாளர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.