கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு வாலிபர் பலி

கொரோனாவுக்கு வாலிபர் பலி

Update: 2021-04-27 17:46 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு வாலிபர் பலியானார். ஒரேநாளில் 426 பேர் பாதிக்கப்பட்டனர்.
கொரோனா
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்தவர் 24 வயது வாலிபர். காய்ச்சல், இருமல் காரணமாக 9 நாட்களாக அவதிப்பட்டார். அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா இருப்பது உறுதியானது. அவர் கடந்த 14-ந் தேதி சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 126 ஆகஉயர்ந்துள்ளது.
426 பேர் பாதிப்பு
இதற்கிடையே தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று 426 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 382 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 13 ஆயிரத்து 174 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 10 ஆயிரத்து 428 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2 ஆயிரத்து 620 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்