சங்கராபுரம் அருகே கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
சங்கராபுரம் அருகே கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகள் ராஜேஸ்வரி(வயது 20). இவர் தேவியாக்குறிச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி.(கம்ப்யூட்டர் சயின்ஸ்) 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று ராஜேஸ்வரி விஷம் குடித்தார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி ராஜேஸ்வரி பரிதாபமாக இறந்தார். தேர்வில் தோல்வி அடைந்த பாடங்கள்(அரியர்) இருப்பதை பெற்றோரிடம் கூறினால் அவர்கள் திட்டுவார்கள் என பயந்துபோய் ராஜேஸ்வரி விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.