மடத்துக்குளம் பகுதியில் உள்ள உரக்கடைகளில் அதிகாரிகள்ஆய்வு மேற்கொண்டனர்.
மடத்துக்குளம் பகுதியில் உள்ள உரக்கடைகளில் அதிகாரிகள்ஆய்வு மேற்கொண்டனர்.;
மடத்துக்குளம்
மடத்துக்குளம் பகுதியில் உள்ள உரக்கடைகளில் அதிகாரிகள்ஆய்வு மேற்கொண்டனர்.
உரக்கடை
மடத்துக்குளம் பகுதியை சேர்ந்த உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை கடைகளில் தாராபுரம் வேளாண் உதவி இயக்குநர் லீலாவதி மற்றும் மடத்துக்குளம், தாராபுரம் ஆகிய பகுதியைச் சேர்ந்த வேளாண் அலுவலர்கள் மடத்துக்குளம் பகுதியில் உள்ள உரக்கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
சமீப காலங்களில் உரங்களின் விலை உயர்வு என அறிவிக்கப்பட்டுள்ளதால், பழைய இருப்பிலுள்ள உரங்களை புதிய விலைக்கு விற்பனை செய்வதை தடுக்கவும், உரபதுக்கல் உள்ளனவா? எனவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நடவடிக்கை
இதுகுறித்து மடத்துக்குளம் வேளாண் உதவி இயக்குனர் ராஜேஸ்வரி கூறுகையில் விவசாயிகளுக்கு, உரக்கடை உரிமையாளர்கள் அரசு நிர்ணயித்த விலையை விட, அதிக விலை அல்லது விவசாயம் அல்லாத நபர்களுக்கு உரங்களை விற்பனை செய்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபடுவது விவசாயிகளுக்கு தெரியவந்தால், விவசாயிகள் மடத்துக்குளம் வட்டார வேளாண்மை அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். அவ்வாறு முறைகேடு நடைபெறுவது கண்டறிந்தால், உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985-ன் படி விற்பனை உரிமம் ரத்து செய்யப்பட்டு, தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.