குமரலிங்கம் முக்கிய சாலையில் மேற்கொள்ளப்படும் குடிநீர்க் குழாய் பதிக்கும் பணியால் போக்குவரத்து பாதிக்கப்படுவதால் இரவு நேரங்களில் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமரலிங்கம் முக்கிய சாலையில் மேற்கொள்ளப்படும் குடிநீர்க் குழாய் பதிக்கும் பணியால் போக்குவரத்து பாதிக்கப்படுவதால் இரவு நேரங்களில் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போடிப்பட்டி
குமரலிங்கம் முக்கிய சாலையில் மேற்கொள்ளப்படும் குடிநீர்க் குழாய் பதிக்கும் பணியால் போக்குவரத்து பாதிக்கப்படுவதால் இரவு நேரங்களில் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுற்றுலாத் தலங்கள்
உடுமலையிலிருந்து குமரலிங்கம் வழியாக பழனி செல்லும் முக்கிய சாலையில் தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.இந்த சாலை திருமூர்த்திமலை, அமராவதி, ஆனைமலை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாகவும் உள்ளது. அத்துடன் கொழுமம், ருத்திராபாளையம், பெருமாள்புதூர், சாமராயப்பட்டி, உரல்பட்டி உள்ளிட்ட கிராம மக்களின் முக்கிய போக்குவரத்து வழித்தடமாகவும் உள்ளது.குமரலிங்கம் பஸ் நிலையம் முதல் ஆற்றுப்பாலம் வரை இந்த சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் இந்த சாலையில் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. இந்தநிலையில் இந்த சாலையில் குடிநீர்க் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
குமரலிங்கம்-பழனி சாலையில் குடிநீர்க் குழாய் பதிப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டு சாலையில் மண் குவித்து வைக்கப்பட்டுள்ளது.இதனால் எதிரெதிரே வாகனங்கள் வருவதற்கு வழியில்லாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இரவுநேர ஊரடங்கு
மேலும் ஆழமாகவும் நீளமாகவும் குழிகள் தோண்டப்பட்டு இரவு நேரத்தில் மூடப்படாமலும் எச்சரிக்கை அறிவிப்புகள் எதுவும் இல்லாமலும் அப்படியே விடப்பட்டுள்ளது.இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.அத்துடன் பகல் நேரத்தில் பணிகள் நடப்பதால் போக்குவரத்துக்கு மிகவும் இடையூறு ஏற்படுகிறது.தற்போது இரவு நேரங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் போக்குவரத்து நிறைந்த பகுதிகளில் குடிநீர்க்குழாய் பணிகள், சாலைப்பணிகள் போன்ற வளர்ச்சிப் பணிகளை இரவு நேரத்தில் மேற்கொள்ளலாம்.அவ்வாறு மேற்கொள்வதன் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்க முடியும்.மேலும் குடிநீர்க் குழாய்கள் அமைப்பதற்காக தோண்டப்படும் குழிகளை உடனடியாக மூடவும், சேதமடைந்த சாலைகளை விரைவில் சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.