தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் கொள்கலனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் கொள்கலனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.;

Update: 2021-04-27 16:11 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ஆக்சிஜன் கொள்கலனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
ஆக்சிஜன் சிலிண்டர் தேவை
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆக்சிஜன் தேவை அதிகரித்து உள்ளது.
வடமாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்களை நோயாளிகளின் உறவினர்கள் தூக்கி செல்லும் நிகழ்வுகள் நடந்துள்ளது. இதை தொடர்ந்து நாடு முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆக்சிஜன் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதேபோன்று தமிழகத்திலுள்ள ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் கொதிகலன்கள் மற்றும் சிலிண்டர்களை மிகுந்த பாதுகாப்புடன் பராமரித்து வருகின்றனர். 
துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் 16 கிலோ லிட்டர் திரவ ஆக்சிஜனை சேகரித்து வைக்கும் கொள்கலன் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த கொள்கலனில் திரவ ஆக்சிஜன் நிரப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதனை பாதுகாக்கும் வகையில், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 
அதன்படி அந்த கொள்கலனுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 
இதனால் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி பரபரப்பாக இயங்கி வருகிறது.

மேலும் செய்திகள்