பெயிண்டர் கடத்தி கொலை

பெயிண்டர் கடத்தி கொலை

Update: 2021-04-27 16:06 GMT
வடவள்ளி,

கோவை அருகே 3 கிராம் நகை மாயமான விவகாரத்தில் பெயிண்டர் கடத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது

பெயிண்டர்

கோவையை அடுத்த வீரகேரளம் தேவர்வீதியை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 44). பெயிண்டர். இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி திரிந்தார். இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி தர்மலிங்கம் வீட்டில் இருந்தார். அப்போது 5 பேர் காரில் வந்தனர். அவர்கள் தர்மலிங்கத்திடம் தனியாக பேசவேண்டும் என்று கூறி அழைத்தனர்.


அப்போது அவருடைய தாய் லட்சுமி, தனது மகனை எங்கு அழைத்துச் செல்கிறீர்கள் என கேட்டுள்ளார். அதில் லட்சுமிக்கு அறிமுகமான ஒருவர், தர்மலிங்கத்தை கொஞ்சம் பேசிவிட்டு அனுப்பி விடுவதாக கூறியுள்ளார்.
இறந்து கிடந்தார்

இதையடுத்து அவர்கள் 5 பேரும், தர்மலிங்கத்தை காரில் ஏற்றி சென்ற னர். அதன்பிறகு அவர் வீடு திரும்ப வில்லை. 

இந்த நிலையில், வீரகேர ளம் டாஸ்மாக் மதுக்கடைக்கு பின்புறம் உள்ள மயானத்தில் தர்மலிங் கம் இறந்து கிடப்பதாக லட்சுமியிடம் அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

உடனே அவர், அங்கு சென்று பார்த்த போது தர்மலிங்கம் பிணமாக கிடந்தார். அவரின் உடலில் பல இடங்களில் காயம் இருந்தது. இதனால் தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக வடவள்ளி போலீஸ் நிலை யத்தில் லட்சுமி புகார் அளித்தார்.

2 பேர் கைது

அப்போது வீட்டில் இருந்த தனது மகனை 5 பேர் காரில் அழைத்துச் சென்றதாகவும், அதில் ஒருவர் தனக்கும் தெரிந்தவர் என்று லட்சுமி கூறினார். அதன் பேரில் 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். 

இதில் அவர்களது பெயர், பேரூர் செட்டிபாளையத்தை சேர்ந்த முத்துக்குமார், வடவள்ளியை சேர்ந்த பிரபு என்பதும், கொலையில் அவர்களுக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது.

எனவே இது குறித்து வடவள்ளி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து முத்துக்குமார், பிரபு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். 

3 பேருக்கு வலைவீச்சு

அவர்கள் போலீசாரிடம் கூறியதாவது

டாஸ்மாக் கடைக்கு செல்லும் தர்மலிங்கத்துடன், எங்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் நாங்கள் அடிக்கடி சேர்த்து மது குடிப்போம். கடந்த 23-ந் தேதி தர்மலிங்கத்துடன் சேர்ந்து 5 பேரும் மது குடித்து விட்டு நாங்கள் தங்கிய அறையிலேயே தூங்கி விட்டோம். 

காலையில் எழுந்து பார்த்த போது அறையில் வைத்து இருந்த 3 கிராம் நகை மற்றும் ரொக்க பணம் மாயமானது. அதை தர்மலிங்கம் தான் எடுத்து இருக்க வேண்டும் என்று கருதினோம். இதற்காக அவரது வீட்டிற்கு சென்று காரில் கடத்தி சென்றோம். 

பின்னர் நகை, பணம் திருட்டு போனது குறித்து விசாரித்தோம். அப்போது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்து நாங்கள் 5 பேரும் சேர்ந்து தாக்கியதில் தர்மலிங்கம் இறந்து விட்டார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதைத்தொடர்ந்து இந்த கொலை வழக்கு தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்