கூத்தாண்டவர் கோவிலில் திருநங்கைகள் சாமி தரிசனம்

கூத்தாண்டவர் கோவிலில் திருநங்கைகள் சாமி தரிசனம்

Update: 2021-04-27 15:37 GMT

விழுப்புரம்

கொரோனா தொற்று காரணமாக உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் வெளியூர்களில் இருந்து வந்த திருநங்கைகள் சிலர் குழுக்களாக கோவிலுக்கு வந்து ஆடிப்பாடி செல்கின்றனர். 

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் சில திருநங்கைகள் கூத்தாண்டவர் கோவிலுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கோவில் முன்பு கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து சாமி தரிசனம் செய்து விட்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர். அடுத்த ஆண்டு சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற வேண்டும் என கூத்தாண்டவரிடம் அவர்கள் வேண்டிக்கொண்டனர்.

மேலும் செய்திகள்