பள்ளி மாணவிகளை கடத்தி பாலியல் தொந்தரவு போக்சோவில் 2 வாலிபர்கள் கைது உடந்தையாக இருந்த நண்பரும் சிக்கினார்

பள்ளி மாணவிகளை கடத்தி பாலியல் தொந்தரவு செய்த 2 வாலிபர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-04-27 15:10 GMT

உத்தமபாளையம்:
கம்பத்தை சேர்ந்தவர் சீனு(வயது 20). புதுப்பட்டியை சேர்ந்தவர் குருநாதன் (20). இருவரும் நண்பர்கள். இவர்கள் 9-ம் வகுப்பு படிக்கும் 15 வயதான 2 மாணவிகளை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றனர். இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில், போடி அருகே திருமலாபுரத்தில் உள்ள அவர்களது நண்பர் நவநீதனின் உறவினர் வீட்டில் வைத்து மாணவிகளை 2 பேரும் பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் போலீசார், 2 மாணவிகள் மற்றும் அவர்களை கடத்தி சென்ற சீனு, குருநாதன் ஆகியோரை பிடித்து மாவட்ட குழந்தைகள் நல பிரிவுஅலுவலர் சுரேஷ்குமாரிடம் விசாரணைக்கு ஆஜர்படுத்தினர். அவர் இதுகுறித்து உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சீனு, குருநாதனை கைது செய்தனர். மேலும் மாணவிகளை கடத்துவதற்கு உடந்தையாக இருந்த நவநீதனை(20) போலீசார் கைது செய்தனர். மாணவிகள் இருவரும் தேனியில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்