ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 317 பேருக்கு கொரோனா
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 317 பேருக்கு கொரோனா
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 317 பேருக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.
மாவட்டம் முழுவதிலும் 1258 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 724 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.