கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
வத்தலக்குண்டுவில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு விவேகானந்தர் நகரை சேர்ந்தவர் தங்கப்பாண்டி (வயது 20). இவர், தனது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக வத்தலக்குண்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்லா, போலீஸ் ஏட்டுகள் மூர்த்தி, செந்தில் ஆகியோர் தங்கப்பாண்டி வீட்டில் சோதனை செய்தனர். அப்போது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதேபோல் அதே பகுதியில் கஞ்சா விற்பனை செய்து தலைமறைவான கண்ணன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
------