கொரோனா விதிமீறல் 6 பஸ்களுக்கு அபராதம்

விழுப்புரத்தில் கொரோனா பாதுகாப்பு விதிமுறையை மீறியதால் 6 பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-04-27 14:40 GMT
விழுப்புரம், 

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நேற்று முன்தினம் முதல் பஸ்களில் இருக்கைகளில் அமர்ந்து மட்டுமே பயணிகள் பயணம் மேற்கொள்ள வேண்டும், நின்றுகொண்டு பயணம் செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடு அமலுக்கு வந்தது.
இந்த கட்டுப்பாட்டின்படி விழுப்புரத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் முறையாக இயக்கப்படுகின்றதா என்று நேற்று விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

6 பஸ்களுக்கு அபராதம்

அப்போது விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலூருக்கும் மற்றும் விழுப்புரத்தில்இருந்து புதுச்சேரிக்கும் புறப்பட இருந்த தனியார் பஸ்களிலும், பண்ருட்டி, திருக்கோவிலூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து விழுப்புரம் வந்த தனியார் பஸ்களிலும் என 5 பஸ்களில் பயணிகள், இருக்கைகளில் அமர்ந்துள்ளதோடு மட்டுமன்றி அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றியதால் அவர்கள் நின்று கொண்டு பயணம் செய்ததை கண்டறிந்த அதிகாரிகள் அந்த 5 பஸ்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
மேலும் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு புறப்பட்ட அரசு பஸ்சிலும் விதியை மீறி அதிகமான பயணிகளை ஏற்றியது கண்டறியப்பட்டு அந்த பஸ்சிற்கும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்