வாணியம்பாடி கொரோனா சிகிச்சை மையத்தில் அதிகாரி ஆய்வு

வாணியம்பாடி கொரோனா சிகிச்சை மையத்தில் அதிகாரி ஆய்வு

Update: 2021-04-27 13:38 GMT
வாணியம்பாடி

வாணியம்பாடி இசுலாமியா திறன் வளர்ச்சி மேம்பாட்டு மைய வளாகத்தில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தினை ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் மகேஷ்பாபு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கொரோனா சிகிச்சை மையம் செயல்படும் விதம், அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மையத்தில் உள்ள டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

 தொடர்ந்து தேவையான உதவிகளை உடனடியாக செய்து தரப்படும் என உறுதியளித்தார். ஆய்வின் போது ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் அருண், வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விநாயகம், மணவாளன், மருத்துவ அலுவலர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்