சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
சேத்துப்பட்டு
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு- செஞ்சி சாலையில் உள்ள சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 19-ந் தேதி வட்டார வளர்ச்சி அலுவலர் ரபியுல்லாவிடம் மனு கொடுத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை வழங்காததை கண்டித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கத் தலைவர் ரமேஷ்பாபு தலைமையில் இன்த போராட்டம் நடந்தது. போராட்டத்தை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் கண்டிப்பாக வேலை வழங்கப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் ரபியுல்லா கூறினார். அதைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.