அரசூரில் போராட்டம்; 35 பேர் கைது

ஸ்டெர்லைட் ஆலை திறக்க எதிர்ப்பு தொிவித்து அரசூரில் போராட்டம் நடத்திய 35 போ் கைது செய்யப்பட்டனா்.

Update: 2021-04-27 03:01 GMT
அரசூர், 

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள அரசூர் கூட்ரோட்டில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை திறக்க எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்திற்கு உளுந்தூர்பேட்டை தொகுதி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் அம்பேத்கர், ஒருங்கிணைப்பாளர் மனோ ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 35 பேரை திருவெண்ணெய்நல்லூர் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்