அந்தியூரில், கொரோனா விதிமுறைகளை மீறிய ஓட்டல்-கடை உரிமையாளர்கள் மீது வழக்கு

அந்தியூரில் கொரோனா விதிமுறைகளை மீறிய ஓட்டல் மற்றும் கடை உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Update: 2021-04-27 01:19 GMT
அந்தியூர்
அந்தியூர் அருகே உள்ள பட்லூர் நால் ரோட்டில் வெள்ளித்திருப்பூர் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஓட்டல் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் எண்ணமங்கலம் கோவிலூர் பகுதியில் கொரோனா விதிமுறையை மீறிய பெட்டிக்கடை உரிமையாளர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்