பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம்

சித்திரை திருவிழாவையொட்டி பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

Update: 2021-04-27 01:03 GMT
பவானி,

பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண உற்சவமும், தேர் உலா நிகழ்ச்சியும் விமர்சையாக நடக்கும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதை தொடர்ந்து சங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா மிக எளிமையான முறையில் நடந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசின் அறிவிப்பின் படி நேற்று முதல் வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டு பக்தர்கள் தரிசினத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
சித்திரை திருவிழாவின் 9-வது நாளான நேற்று சங்கமேஸ்வரர் சன்னதியில் சங்கமேஸ்வரர் உடனமர் வேதநாயகி அம்மன் உற்சவ மூர்த்திகளுக்கு திருக்கல்யாண உற்சவ விழா நடந்தது. ஆனால் கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து மாலை உற்சவ மூர்த்திகள் சப்பரத்தில் ஏற்றப்பட்டு கோவில் வளாகத்தை சுற்றி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

மேலும் செய்திகள்