குழந்தைகளுக்கு நீச்சல் கற்று கொடுக்க சென்ற போட்டோகிராபர் குட்டையில் மூழ்கி பலி
குழந்தைகளுக்கு நீச்சல் கற்று கொடுக்க சென்ற போட்டோகிராபர் குட்டையில் மூழ்கி பலியானார்.
பனமரத்துப்பட்டி:
குழந்தைகளுக்கு நீச்சல் கற்று கொடுக்க சென்ற போட்டோகிராபர் குட்டையில் மூழ்கி பலியானார்.
போட்டோகிராபர்
சேலம் கொண்டலாம்பட்டி சுப்பிரமணியன் கோவில் தெருவை சேர்ந்தவர் குணாளன் (வயது 46).போட்டோகிராபர். இவர் அதே பகுதியில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு என்பதால் தயாளன் தனது குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுத் தருவதற்காக பாரப்பட்டி அடுத்துள்ள பசுவநத்தம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்குவாரி பகுதிக்கு சென்று உள்ளார்.
குட்டையில் மூழ்கினார்
அங்கிருந்த குட்டையில் குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க முடிவு செய்த அவர் ஆழம் பார்ப்பதற்காக முதலில் குட்டையில் இறங்கியுள்ளார். அப்போது ஆழம் தெரியாமல் அவர் இறங்கியதால் பாறை இடுக்கில் கால் மாட்டி தண்ணீரில் மூழ்கியுள்ளார். தந்தை மூழ்குவதை கண்ட குழந்தைகள் கதறி அழுதுள்ளனர்.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து குணாளனை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குணாளனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க சென்ற தந்தை கல்குவாரி குட்டையில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.