ஆத்தூரில் ரூ.45 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
ஆத்தூரில் ரூ.45 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.;
ஆத்தூர்:
ஆத்தூர் புதுப்பேட்டையில் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடந்தது. இதில் சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதில் பி.டி. ரக பருத்தி குவிண்டாலுக்கு ரூ.4 ஆயிரத்து 198 முதல் ரூ.6 ஆயிரத்து 819 வரையும், டி.சி.எச். பருத்தி குவிண்டாலுக்கு ரூ.4 ஆயிரத்து 489 முதல் ரூ. 6 ஆயிரத்து 899 வரைக்கும்,கொட்டு பருத்தி ரூ.2 ஆயிரத்து 599 முதல் ரூ.4 ஆயிரத்து 200 வரைக்கும் விற்பனையானது. மொத்தம் 2 ஆயிரத்து 350 பருத்தி மூட்டைகள் ரூ.45 லட்சத்துக்கு ஏலம் போனது.