தாரமங்கலம் அருகே 6 மாத கர்ப்பிணி தற்கொலை

தாரமங்கலம் அருகே 6 மாத கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-04-26 23:38 GMT
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகே உள்ள பாப்பம்பாடி மொரம்புக்காடு பகுதியை சேர்ந்தவர் தங்கராஜூ. இவருைடய மனைவி சர்விகா (வயது 23). இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சர்விகா மீண்டும் கர்ப்பமானார். தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். சர்விகா தனது மகளுடன் படுத்து தூங்கும் போது, 2 வயது குழந்தை காலால் உதைத்துவிட்டதாக தெரிகிறது. வலி தாங்க முடியாமல் துடித்த அவரை உறவினர்கள் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். பின்னர் வீடு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் வீட்டில் சர்விகா திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை  செய்து கொண்டார். இது குறித்து தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சர்விகா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்