நெல்லை மாவட்டத்தில் போலீசாருக்கு 2-வது தவணை கொரோனா தடுப்பூசி
நெல்லை மாவட்டத்தில் போலீசாருக்கு 2-வது தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
நெல்லை, ஏப்:
நெல்லை மாவட்டத்தில் போலீசாருக்கு 2-வது தவணையாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
2-வது தவணை
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் முன்கள பணியாளர்களாக செயல்பட்டுவரும் சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் போலீசாருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டது.
இந்த தடுப்பூசியானது 2️ தவணைகளாக போடப்பட வேண்டும். அவ்வாறு முதல் கட்டமாக தடுப்பூசி போட்டுக் கொண்ட போலீசாருக்கு 2-வது தவணை தடுப்பூசி போடும் பணி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
தடுப்பூசி
அங்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கொரோனா தடுப்பு மையத்தில் போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
இந்த பணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் போலீசார் அனைவரும் முக கவசம் அணிந்து பணியில் ஈடுபட வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றி பணி செய்ய வேண்டும் என்று ஆலோசனைகளை வழங்கினார்.