மாயமான மூதாட்டி கண்மாயில் பிணமாக கிடந்தார்

சாத்தூாில் மாயமான மூதாட்டி கண்மாயில் பிணமாக கிடந்தார்.

Update: 2021-04-26 20:15 GMT
சாத்தூர், 
சாத்தூர் காமராஜாபுரம் 1-வது தெருவை சேர்ந்தவர் பாலன் (வயது58). இவரது தாய் சின்னம்மாள் (93). இவர் தனியாக சாத்தூர் வண்ணாரப்பேட்டையில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 19-ந் தேதி முதல் காணவில்லை. இந்தநிலையில் நேற்று சத்திரப்பட்டி கண்மாய்க்குள் மூதாட்டி ஒருவர் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாலன் அங்கு சென்று பார்த்த போது, இறந்தது சின்னம்மாள் தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து சாத்தூர் தாலுகா போலீசில் தனது தாய் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பாலன் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்