மின் கம்பியை பிடித்து வாலிபர் தற்கொலை
மின் கம்பியை பிடித்து வாலிபர் தற்கொலை
திருமங்கலம்
திருமங்கலத்தை அடுத்த சிந்துபட்டி அருகே உள்ள தும்மக்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யர். இவரது மகன் பழனி(வயது 23). பால் வண்டியில் கிளீனராக பணியாற்றி வந்த இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனவேதனை அடைந்த பழனி தற்கொலை செய்து கொள்வதாக கூறி வீட்டின் அருகே இருந்த உயர்மின் அழுத்த கம்பியை பிடித்தார். இதனால் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட பழனி உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.