பரிசோதனை முடிவை தாமதமாக வழங்கிய கொரோனா ஆய்வகங்களின் உரிமம் ரத்து

பரிசோதனை முடிவை தாமதமாக வழங்கிய கொரோனா ஆய்வகங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-04-26 20:13 GMT
பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ்குப்தா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

பெங்களூருவில் கொரோனா பரிசோதனை முடிவை 24 மணி நேரத்தில் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஆயினும் மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் சில ஆய்வகங்கள், பரிசோதனை முடிவுகளை தாமதமாக வழங்குவதாக புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் மெடல் ஆய்வகம், ஆரதி ஆய்வகத்திற்கான உரிமத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளோம்.

ஆர்.வி.மெட்ரோபாலிஸ், பி.ஜி.எஸ். குளோபல் மருத்துவ கல்லூரி ஆய்வகத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பியுள்ளோம். எக்காரணம் கொண்டும் பரிசோதனை முடிவுகளை தாமதமாக வழங்கக்கூடாது. குறித்த நேரத்திற்குள் முடிவை வழங்கி, அவர்களுக்கான எண்ணை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு கவுரவ்குப்தா கூறினார்.

மேலும் செய்திகள்