கணவன்-மனைவிக்கு கத்திக்குத்து; 2 பேர் கைது செய்யப்பட்டனர்
கணவன்-மனைவிக்கு கத்திக்குத்து; முன்னாள் ஊராட்சி தலைவர் உள்பட 2 பேர் கைது
மேலூர்
மேலூர் அருகே கீழவளவு போலீஸ் சரகத்தில் உள்ள வாச்சாம்பட்டியை சேர்ந்தவர் அய்யங்காளை(வயது 65). இவருக்கும், இவரது தம்பியின் மகன் ரேவந்த்(30) என்பவருக்கும் இிடையே குடும்ப பிரச்சினை மற்றும் சொத்து பிரச்சினை இருந்துள்ளது.
இந்தநிலையில் ரேவந்த் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து அய்யங்காளை, அவரது மனைவி அஞ்சலிதேவி(60) ஆகிய இருவரையும் தாக்கினர். மேலும் கத்தியால் குத்தியதாக தெரிகிறது.
இதில் அய்யங்காளை, அஞ்சலிதேவி ஆகிய இருவரும் படுகாயம் அடைந்ததால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்த புகாரின்ேபரில் ரேவந்த் மற்றும் அவரது உறவினர் பூங்கோதை(55) ஆகிய இருவரையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் பாரதிராஜா(35), வீரம்மாள்(50) ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். கைதான பூங்கோதை கீழவளவு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார்.