தென்காசி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி
தென்காசி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியானார்கள்.
தென்காசி, ஏப்:
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 60 வயது முதியவர், 60 வயது பெண் ஆகியோர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்தனர். மேலும், தென்காசி மாவட்டத்தில் நேற்று 246 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்து 156 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 9 ஆயிரத்து 482 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.