தூங்கிய பெண்ணிடம் தாலிச்சங்கிலி பறிப்பு

பெண்ணிடம் தாலிச்சங்கிலி பறிக்கப்பட்டது.

Update: 2021-04-26 20:04 GMT
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிபாளையம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மனைவி அலமேலு (வயது 38). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அண்ணாதுரை வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். மகன், பெங்களூருவில் வேலை பார்த்து வருகிறார். மகளுக்கு திருமணமாகி விட்டது.  இதனால் வீட்டில் தனியாக வசித்து வரும் அலமேலு ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வெளியே ஆடுகளுக்கு பாதுகாப்பாக கட்டிலில் அலமேலு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு உள்ளாடை மட்டும் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் அலமேலு கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து பெரம்பலூர் போலீசில் அலமேலு கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்