விக்கிரமசிங்கபுரம் அருகே ஒரே குடும்பத்தில் 7 பேருக்கு கொரோனா

விக்கிரமசிங்கபுரம் அருகே ஒரே குடும்பத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-04-26 19:39 GMT
விக்கிரமசிங்கபுரம், ஏப்:
விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரம் காமராஜர் நகரைச் சேர்ந்த 70 வயது முதியவருக்கு நேற்று முன்தினம் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 6 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து அந்த தெருவில் முழு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் அப்பகுதியில் தடுப்பு ஏற்படுத்தி கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டன பஞ்சாயத்து செயலர் வேலு, சுகாதார பணியாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி குருகுலராமன் ஆகியோர் இந்த பணிகளில் ஈடுபட்டனர். 
கடையம் அருகே உள்ள திருமலையப்பபுரத்தில் ஒரே தெருவில் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்