சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

Update: 2021-04-26 19:18 GMT
விக்கிரமசிங்கபுரம், ஏப்:
கொரோனா 2-வது அலை காரணமாக காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல நேற்று முதல் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மறு உத்தரவு வரும் வரை இந்த தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இதனால் கோவில் வளாகம் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் செய்திகள்