மானாமதுரையில் ராணுவ வீரர்கள் ஒன்று சேர்ந்து வைகை பட்டாளம் என்ற அமைப்பை உருவாக்கி நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். கொரோனா காலத்தில் சர்க்கஸ் கலைஞர்கள், ஏழ்மையில் இருப்பவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அந்த அமைப்பின் முதலாம் ஆண்டையொட்டி இளையான்குடி பகுதியை சேர்ந்த ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 3 பேருக்கு இலவச தையல் எந்திரங்களை வழங்கினர். மானாமதுரையில் நடந்த நிகழ்ச்சியில் 15 ராணுவ வீரர்கள் ரத்த தானம் செய்தனர்.