வாக்கு எண்ணும் போது செய்ய வேண்டிய பணிகள் என்ன?
வாக்கு எண்ணும் போது பணியாளர்கள் செய்ய வேண்டிய பணிகள் என்ன? என்பது குறித்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி விளக்கம் அளித்து உள்ளார்.
சிவகங்கை,
பயிற்சி கூட்டம்
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 6-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை வருகிற 2-ந்தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பயிற்சி கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கி பேசியதாவது:-
வாக்கு எண்ணிக்கை பணி மேற்கொள்ளவுள்ள அலுவலர்கள் தாங்கள் மேற்கொள்ள வேண்டிய பணி குறித்து நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். பணியின் போது கவனமுடன் செயல்பட்டு எவ்வித இடர்பாடுகள் இன்றி நல்லமுறையில் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்ட பணியினை முடிக்க வேண்டும்.
வாக்கு எண்ணிக்கை நாளன்று காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணும் பணியும், 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்கு எண்ணும் பணியும் தொடங்க உள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 14 மேஜைகள் வீதம் எண்ணும் பணியும், அதேபோல் தபால் வாக்கிற்கு 3 மேஜைகள் வீதம் எண்ணும் பணியும் நடைபெற உள்ளன. மேலும், ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கண்காணிப்பாளர், ஒரு உதவி கண்காணிப்பாளர், ஒரு மைக்ரோ அப்சர்வர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவார்கள்.
அதன் அடிப்படையில் 4 சட்டமன்ற தொகுதிக்கும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். பணியின் போது அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி பணிகளை கவனமுடன் மேற்கொள்ள வேண்டும். ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஆலோசனை பெற்று வாக்கு எண்ணும் பணியை சிறந்த முறையில் முடித்திட வேண்டும்.
வாக்கு எண்ணும் போது பணியாளர்கள் செய்ய வேண்டிய பணிகள் என்ன? என்பது குறித்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி விளக்கம் அளித்து உள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 6-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை வருகிற 2-ந்தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பயிற்சி கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கி பேசியதாவது:-
நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகின்ற 2-ந்்தேதி நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை மற்றும் மானாமதுரை (தனி) சட்டமன்றத் தொகுதிகளில் பதிவன வாக்குப்பதிவு எந்திரங்கள் காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி மற்றும் அழகப்பா தொழில்நுட்ப கல்லூரியில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
தபால் வாக்கு
வாக்கு எண்ணிக்கை நாளன்று காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணும் பணியும், 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்கு எண்ணும் பணியும் தொடங்க உள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 14 மேஜைகள் வீதம் எண்ணும் பணியும், அதேபோல் தபால் வாக்கிற்கு 3 மேஜைகள் வீதம் எண்ணும் பணியும் நடைபெற உள்ளன. மேலும், ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கண்காணிப்பாளர், ஒரு உதவி கண்காணிப்பாளர், ஒரு மைக்ரோ அப்சர்வர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவார்கள்.
அதன் அடிப்படையில் 4 சட்டமன்ற தொகுதிக்கும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். பணியின் போது அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி பணிகளை கவனமுடன் மேற்கொள்ள வேண்டும். ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஆலோசனை பெற்று வாக்கு எண்ணும் பணியை சிறந்த முறையில் முடித்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.