ஆர்.எஸ்.மங்கலம்,
ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிவேல் ஆனந்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஓடக்கரை கண்மாய் கரையில் ரூ.8440 வைத்து சூதாடிக் கொண்டிருந்த சிறுநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மலைராஜ் (வயது40), கடம்பாகுடி கிராமத்தைச் சேர்ந்த அந்தோனி இறையரசன் (30), விசவனூர் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர் செல்வம் (45), இதே ஊரைச் சேர்ந்த சிவக்குமார் (40), ஆசைத ்தம்பி (47), பிள்ளைமாரி கிராமத்தைச் சேர்ந்த அந்தோணிசாமி (46), வீரசோழன் கிராமத்தைச் சேர்ந்த திப்பு சுல்தான் (45), கொடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (35), ஆனந்தூர் கிராமத்தைச் சேர்ந்த சாதிக் பாட்ஷா (50) ஆகிய 9 பேரை ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் கைது செய்தனர்.