கோவையில் நேற்று ஒரே நாளில் 1,056 பேருக்கு கொரோனா
கோவையில் நேற்று ஒரே நாளில் 1,056 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.;
கோவை
கோவையில் நேற்று ஒரே நாளில் 1,056 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்று
தமிழகம் முழுவதும் கடந்த மாதம் முதல் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியல்படி கோவையில் நேற்று ஒரே நாளில் 1,056 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 288 ஆக உயர்ந்து உள்ளது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது ஆண், 67 வயது பெண் ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் எண்ணி க்கை 716 ஆக உயர்ந்து உள்ளது. கோவை அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 1,135 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இதனால் மாவட்டத்தில் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆயிரத்து 883 பேராக உயர்ந்து உள்ளது. தற்போது 6 ஆயிரத்து 689 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வீடுகளில் தனிமைப்படுத்துவது அதிகரிப்பு
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கோவை மாநகராட்சி பகுதியில் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று வரை 981 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும் மாநகராட்சியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 99 ஆக குறைந்து உள்ளது. கோவை மாவட்டத்தில் நேற்று 8,164 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 51 ஆயிரத்து 395 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
தற்போது அரசு மற்றும் தனியார் தடுப்பூசி மையங்களில் மொத்தம் 21,200 டோஸ் தடுப்பூசி இருப்பில் உள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்தனர்.