திருப்பூரில் தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

திருப்பூரில் தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

Update: 2021-04-26 16:59 GMT
திருப்பூர்
திருப்பூரில் தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
 பணம் பறிப்பு
திருப்பூர் மாநகரம் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட டி.டி.பி. மில் ரோட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 21-ந் தேதி தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் தொடர்புடைய காந்திநகர் தியாகி பழனிசாமி நகரை சேர்ந்த சூர்யாவை (வயது 23) அனுப்பர்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சூர்யா மீது திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், ஒரு திருட்டு வழக்கும், வடக்கு போலீஸ் நிலையத்தில் 5 திருட்டு வழக்கும், தெற்கு போலீஸ் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை மிரட்டல் வழக்கும், மேலும் அனுப்பர்பாளையம், திண்டுக்கல் மாவட்டம் சாமிநாதபுரம், திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஆகிய போலீஸ் நிலையங்கள் உட்பட மொத்தம் 13 வழக்குகள் உள்ளது.
குண்டர் சட்டம்
சூர்யா தொடர்ந்து கொலை, கூட்டுக்கொள்ளை, திருட்டு போன்ற செயலில் ஈடுபட்டு பொது மக்களுக்கும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சூர்யாவை ஒரு ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு சூரியாவிடம் நேற்று வழங்கப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை திருப்பூர் மாநகரில் 18 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்