நெகமம் வெள்ளாளபாளையத்தில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை

நெகமம் வெள்ளாளபாளையத்தில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

Update: 2021-04-26 16:59 GMT
நெகமம்

நெகமம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் 45 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நெகமம் அருகே உள்ள வெள்ளாள பாளையத்தில் ஒரு பெண்ணுக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அங்குள்ள பொதுமக்களுக்கு சளி மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டது. 

இதில் டாக்டர் பிரியங்கா, சுகாதார ஆய்வாளர் சரவணன், ஆய்வக நிபுணர் சிபிலா மற்றும் நர்சுகள், சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்தனர். பின்னர் அவை ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 மேலும் இந்த கிராமத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டதுடன், பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த கிராமத்தில் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தி வருவதுடன், சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, பொதுமக்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம் கட்டாயம் அணிந்து சமூக இடை வெளியை கடைபிடித்தால், கொரோனா பரவலை தடுக்கலாம் என்றனர். 

மேலும் செய்திகள்