வெள்ளகோவிலில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

வெள்ளகோவிலில்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2021-04-26 16:40 GMT
வெள்ளகோவில்
வெள்ளகோவில் ராஜீவ்நகரில் வசித்து வந்தவர் பார்த்திபன்(வயது 30) விசைத்தறி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று விசைத்தறி கூடத்திற்கு வேலைக்கு சென்றுவிட்டு 4 மணி அளவில் டீ குடிக்கும் வேலையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது தாய் சாந்தாமணி (57) டீ வேண்டுமா எனக் கேட்டுள்ளார். அப்போது வயிறு வலிக்கிறது. பனங்கற்கண்டு வாங்கி வாருங்கள் என்று தாயாரிடம் கூறியுள்ளார். உடனே சாந்தாமணி பனங்கற்கண்டு வாங்க அருகில் இருந்த கடைக்கு சென்று விட்டுதிரும்பி வந்து பார்க்கும்போது வீட்டின் கதவு உள்பக்கம் சாத்தப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது  பார்த்திபன் தூக்கில் தொங்கிய நிலையில்  இருந்துள்ளார், உடனே அருகில் இருந்தவர்கள் உதவியுடன்  கீழே இறக்கி பார்த்த போது அவர் இறந்து இருப்பது தெரியவந்தது, இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயசேகர் ஆகியோர் பார்த்திபன் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். பார்த்திபனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

மேலும் செய்திகள்