திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 385 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 385 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-04-26 16:35 GMT
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 385 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
385 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று குறையவில்லை. தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 385 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 ஆக்சிஜன் தொட்டி
தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 562 -ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் நேற்று ஒரே நாளில் 277 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 813-ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா பாதித்த 2 ஆயிரத்து 515 சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேலும், 234 பேர் இதுவரை சிகிச்சை பலன் இன்றி கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அரசு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுபோல் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் 3 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் தொட்டி உள்ளது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் மேலும் கூடுதலாக 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதில் ஆக்சிஜன் நிரப்பும் பணி நடைபெற உள்ளது. கொரோனா நோயாளிகளின் தேவைக்கு ஏற்ப ஆக்சிஜன் வழங்கப்படும். இதனால் ஆக்சிஜன் எப்போதும் தேவைக்கு அதிகமாகவே கையிருப்பு இருக்கும் என அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவித்தனர்.
 பரிசோதனை
 திருப்பூர் மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த சளி மாதிரி திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படுகிறது. கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறவர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மேலும், லேசான அறிகுறி இருக்கிறவர்களுக்கும் சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும், தனிமைப்படுத்தவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதுபோல் அறிகுறி இருக்கிறவர்கள் உடனே கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்