தரமற்றதாக போடப்பட்ட புதிய தார்சாலை சேதம்

கன்னிவாடி அருகே புதிததாக போடப்பட்ட தார்சாலை சேதம் அடைந்ததால் அப்பகுதி மக்கள் மறியலில் ஈடு்பட்டனர்.

Update: 2021-04-26 16:17 GMT
திண்டுக்கல் : 

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள பண்ணைப்பட்டியில் இருந்து வேலன்சேர்வைக்காரன்பட்டிக்கு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சாலை உள்ளது. 

இந்த சாலை சேதமடைந்ததால் அதனை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். 

இதையடுத்து மாநில கிராமச்சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.37 லட்சத்து 11 ஆயிரம் செலவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய தார்சாலை அமைக்கப்பட்டது. 

ஆனால் அந்த சாலை அமைக்கப்பட்ட ஓரிரு நாட்களில் சேதம் அடைந்தது.

 இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், தரமற்றதாக புதிய தார்சாலை அமைத்ததாக கூறி வேலவன்சேர்வைக்காரன்பட்டி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆனால் அங்கு அதிகாரிகள் யாரும் வந்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. 
இதைத்தொடர்ந்து கிராம மக்கள் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு திரண்டு வந்து புகார் செய்தனர். 

அவர்களிடம் சம்பந்தப்பட்ட சாலையை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்வதாக கூறினர். 

இதையடுத்து அவர்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர். 

இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  

மேலும் செய்திகள்