குடிமங்கலம் ஒன்றியத்தில் 2,400 பேருக்கு கொரோனா தடுப்பூசி
குடிமங்கலம் ஒன்றியத்தில் 2,400 பேருக்கு கொரோனா தடுப்பூசி
குடிமங்கலம்
கொரோனா தொற்று தமிழகத்தில் அதிகரித்து வருவதால் இதனை தடுக்க தமிழக சுகாதாரத்துறை தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன்படி சுகாதாரத்துறையினர் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட குடிமங்கலம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பூளவாடி, பெதப்பம்பட்டி ராமச்சந்திராபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. மேலும் நடமாடும் மருத்துவக்குழுக்கள் மூலம் புதுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தடுப்பூசிகள் போடப்பட்டன. குடிமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரபாண்டியன் தலைமையில் மருத்துவர் கோகுல் மற்றும் மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு தடுப்பூசிகளை போட்டனர். குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 2,400 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் புதுப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி கலந்துகொண்டார்.