நிலக்கோட்டை கோர்ட்டு மூடப்பட்டது

நிலக்கோட்டை கோர்ட்டில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் கோர்ட்டு மூடப்பட்டது.

Update: 2021-04-26 16:02 GMT
திண்டுக்கல் : 

திண்டுக்கல் மாவட்டம்  நிலக்கோட்டையில் மாஜிஸ்திரேட் கோர்ட்டு உள்ளது.

 இந்த கோர்ட்டில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. 

இதையடுத்து மருத்துவமனையில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

அதில் அவருக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து கோர்ட்டு மூடப்பட்டது. கோர்ட்டு வளாகம் முழுவதும் சுகாதாரத்துறை பணியாளர்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

 கோர்ட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. 

மேலும் செய்திகள்