கழுகுமலை:
கழுகுமலை அருகே உள்ள துலுக்கர்பட்டி சிவகாமி காலனியைச் சேர்ந்த மாரியப்பன் (வயது 69). கூலி வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களாக அவருக்கு தீராத வயிற்றுவலி இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். மனமுடைந்து காணப்பட்ட மாரியப்பன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.