தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே தொழிலாளியை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-04-26 14:52 GMT
திண்டுக்கல் : 
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த கம்பிளியம்பட்டி அருகே உள்ள பொத்தகணவாய்பட்டியை சேர்ந்தவர் குமார். 

இவரது மனைவி மேகலா. கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதை குமாரிடம், அதே பகுதியை சேர்ந்த மேகலாவின் உறவினரான கூலத்தொழிலாளி செல்லையா தட்டிக்கேட்டதாக தெரிகிறது.

 இதனால் ஆத்திரமடைந்த குமார், அவரது தந்தையான மற்ெறாரு செல்லையா (47), தாத்தா சின்னக்காளை (60) ஆகிய 3 பேரும் சேர்ந்து செல்லையாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

 இதுகுறித்து செல்லையா வடமதுரை போலீசில் புகார் செய்தார். 

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து குமார் உள்பட 3 பேரையும் கைது செய்தார்.

மேலும் செய்திகள்