மெஞ்ஞானபுரம் அருகே சனி பிரதோஷ விழா
மெஞ்ஞானபுரம் அருகே கோவிலில் சனிபிரதோஷ ரிழா நடந்தது.
மெஞ்ஞானபுரம்:
மெஞ்ஞானபுரம் அருகே உள்ள ராகு, கேது பரிகார ஸ்தலமான நங்கைமொழி ஞானப்பிரசன்னாம்பிகை சமேத காளத்தீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ விழா நடைபெற்றது. விழாவில் சுவாமிக்கும் நந்தீஸ்வரருக்கும் மஞ்சள், வீபூதி, பன்னீர், சந்தனம் உள்பட பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர்.