கொரோனா பாதித்த சப்-இன்ஸ்பெக்டருக்கு படுக்கை வசதி கிடைக்காததால் ஆதங்கம்

பெங்களூருவில் தினமும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

Update: 2021-04-26 12:13 GMT
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் தினமும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கொரோனா முன்கள பணியாளரான ஒரு உதவி சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கடந்த 2 நாட்களாக பெங்களூருவில் 45 மருத்துவமனைகளுக்கு மேல் அலைந்துவிட்டார். ஆனால் எந்த மருத்துவமனையிலும் அவருக்கு படுக்கை வசதி கிடைக்கவில்லை. இதனால் ஆதங்கம் அடைந்த அவர் தனக்கு படுக்கை வசதி கிடைக்கவில்லை என்று கூறி ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் ஒருவழியாக அவருக்கு உயர் அதிகாரிகளின் மூலம் ஆஸ்பத்திரியில் படுக்கை வசதி கிடைத்ததாக தெரிகிறது.

மேலும் செய்திகள்