கோவை மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 1,038 பேருக்கு கொரோனா
கோவை மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 1,038 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
கோவை,
கோவை மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 1,038 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மேலும் கொரோனாவுக்கு முதியவர் ஒருவர் பலியானார்.
1,038 பேருக்கு கொரோனா
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த காலங்களில் 600 பேர் வரை பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. மேலும், தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.
இதனால் கோவை மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சைப்பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் நேற்று புதிய உச்சமாக 1,038 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதனால் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்து 219-ஆக உயர்ந்துள்ளது.
முதியவர் சாவு
இதுதவிர, நேற்று கொரோனாவுக்கு சிகிச்சைப்பெற்று வந்த 724 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்து 748-ஆக உயர்ந்தது.
கோவை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சைப்பெற்று வந்த 53 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 714-ஆக உயர்ந்துள்ளது. தற்போது 6, ஆயிரத்து 757 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.