பரமத்தி அருகே பெண்களிடம் நகை பறித்த 3 பேர் கைது

பரமத்தி அருகே பெண்களிடம் நகை பறித்த 3 பேர் கைது.

Update: 2021-04-25 22:50 GMT
பரமத்திவேலூர்,

நாமக்கல் மாவட்டம் பெரியமணலியை சேர்ந்த குமரவேல் என்பவரது மகள் சுகந்தி (வயது 34). திருச்செங்கோடு அருகே உள்ள கூட்டப்பள்ளியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது மனைவி செல்வி (34). இவர்கள் இருவரும் மொபட்டில் பரமத்தி நோக்கி வந்தனர். அப்போது நல்லூர் கந்தம்பாளையத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவரது மகன் சாரதி (36), திருச்செங்கோடு கொல்லப்பட்டியைச் சேர்ந்த ராமதாஸ் என்பவரது மகன் மணிகண்டன் (31), அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் பிரகாஷ் (36) ஆகிய 3 பேரும் சாரதியின் காரில் திண்டுக்கல் சென்று கொண்டிருந்தனர். 
அப்போது பரமத்தி அருகே வந்தபோது மொபட்டில் வந்த செல்வியை, சாரதி பார்த்தார். செல்விக்கும், சாரதிக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சாரதி, செல்வியிடம் நாங்கள் திண்டுக்கல் செல்கிறோம் நீங்களும் வாருங்கள் எனக்கூறி செல்வி மற்றும் சுகந்தியை காரில் ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் அருகே வாடிப்பட்டிக்கு சென்றனர்.
 பின்னர் அங்கு சாரதி, மணிகண்டன், பிரகாஷ் ஆகிய 3 பேரும் மது குடித்துவிட்டு சுகந்தி மற்றும் செல்வியுடன் உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து குடிபோதையில் அவர்கள் காரில் பரமத்தி வந்தனர். அங்கு 3 பேரும் சுகந்தி மற்றும் செல்வியிடம் இருந்த நகைகளை பறித்து கொண்டும், அவர்களை கீழே இறக்கி விட்டு சென்றனர்.
இதுகுறித்து சுகந்தி பரமத்தி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாரதி, மணிகண்டன், பிரகாஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்து பரமத்தி கோர்ட்டில் ஆஜர்படுத்தி பரமத்தியில் உள்ள கிளை சிறையில் அடைத்தனர்.
=======

மேலும் செய்திகள்